18 May 2023
Jaffna, Sri Lanka – On this day marking fourteen years since the end of the war in Mullivaikkaal, we commemorate all those lives lost during the last phase of the war, in particular the tens of thousands of Tamils that were killed by the inhumane atrocities committed during the Sri Lankan state’s ruthless and genocidal execution of the final phase of the war.
Fourteen years ago, this very day culminated in the death of more than 70,000 primarily Tamils – a conservative UN estimate – and the enforced disappearance of an untold number, many of which took place after the white flags had been waved. Despite the State’s atrocity crimes having been well documented, perpetrators roam free and occupy the highest positions in the government and military – not a single state actor having been held accountable. Carrying the torch of victor’s justice and bolstered by Sinhala nationalism, successive Sri Lankan governments since the end of the war have continued militarising the North-East, securitising the Tamil population through entrenched surveillance and harassment, and repressing dissent including through efforts to stop memorialisation.
Having swept under the carpet all demands for justice and accountability, the Sri Lankan government has recently been trying to promote a farcical ‘truth and reconciliation’ agenda. This latest attempt to placate the international community has rightly been met with skepticism and critique from the Tamil victim-survivor community, who have been asked too many times to tell their truth only to never see justice. The failure of past internal mechanisms bear testimony to the duplicity of the Sri Lankan government. Without a genuine accountability process, asking the Tamil victim-survivor community to participate in yet another truth commission is just another mode of re-traumatisation, not a meaningful way to deal with the past.
Fourteen years on, it is clear the underlying cause that led to the war continues to persist as the State finds new ways to promote Sinhala-Buddhist nationalism, such as through the Department of Archeology and the Department of Forestry both of which are attempting to rewrite history and colonise traditional Tamil homelands in the North-East.
Yet, despite the full force of the State against them, Tamil victim-survivor communities continue to demonstrate tremendous resilience. Tamil families of the disappeared have continued to protest for over 2000 days, not giving up on their demands for justice and becoming an indomitable force in the Tamil polity. From Kurunthoormalai to Kinniya, displaced Tamil communities continue to fight the Sinhala-Buddhisisation preventing their return to their homes, both in the courts of law and in the streets through peaceful demonstrations. This resilience is equaled only in the heavy burden of trauma these communities carry, and without justice, the psychosocial toll on them should not be understated.
Bleak though the situation seems to be, the Tamil community has not conceded itself to despair. In remembering the memories of Mullivaikkaal and those that perished, we at ACPR reaffirm our commitment to seeking justice and accountability for the atrocity crimes committed during the conflict.
அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்
பதினான்காவது வருடத்தில் முள்ளிவாய்க்காலை நினைவுகூருதல்
18 வைகாசி 2023 ——————————————————————————————————————————————————————————-
யாழ்ப்பாணம், இலங்கை – நாங்கள் இறுதியுத்தத்தில் இழந்த அனைத்து உயிர்களையும், அதிலும் குறிப்பாக் இனவழிப்பை நோக்காகக்கொண்டு இலங்கை அரசினால் இரக்கமில்லாமல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் இறுதி அத்தியாயத்திற் கட்டவிழ்த்துவிடப்பட்ட மனிதாபிமானமற்ற அட்டூழியங்களிற் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை, முள்ளிவாய்காலில் இறுதியுத்தம் முடிவடைந்து பதினான்காவது வருடமாகின்ற இத்தினத்தில் நினைவுகூர்கின்றோம்.
பதினான்கு வருடங்களுக்குமுன் இதேநாளில் இறந்த தமிழர்களின் எண்ணிக்கை ஐநாவின் குறைந்த மதிப்பீட்டினடிப்படையில் 70,000 தாண்டியதுடன். காணமலாக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் எண்ணிலடங்காத அளவை அடைந்தது; இவற்றுட் பெரும்பாலானவை வெள்ளைக்கொடி காட்டப்பட்டபின்னரே நடைபெற்றன. அரசின் அட்டூழியக் குற்றங்கள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டிருப்பினும், அக்குற்றங்களைப் புரிந்தவர்கள் சுதந்திரமாக உலாவுவதுடன், அரசாங்கத்தில் உயர்பதவிகளையும் வகிக்கின்றனர். குற்றம்சாட்டப்பட்ட அரச அதிகாரிகளில் ஒருவரேனும் இதுவரை பொறுப்புக்குள்ளாக்கப்படவில்லை. யுத்தத்திற்குப்பின் தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள், ‘வெற்றியாளனின் நீதி’ எனும் விளக்கைத் தாங்கிக்கொண்டும் சிங்களப் பேரினவாதத்தின் பேராதரவுடனும் வடக்கு – கிழக்கை இராணுவமயமாக்குதல், தமிழ் மக்களைத் தீவிர கண்காணிப்பு மற்றும் தொல்லைகளுக்கு உள்ளாக்குதல் அத்துடன் நினைவேந்தலைத் தடுக்கும் நடவடிக்கைகள் உள்ளடங்கலான எதிர்ப்பு நடவடிக்கைகளை அடக்குதல் ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
இலங்கை அரசாங்கமானது தமிழ்மக்களின் நீதி மற்றம் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளைத் துடைத்தெறிந்துவிட்டு தற்போது மீண்டும் கேலிக்கூத்தானதொரு ‘உண்மை மற்றும் நல்லிணக்க’ திட்டத்தை ஊக்குவிக்க முயல்கின்றது. பலமுறை பல அவைகளில் தமது உண்மையை எடுத்து இயம்பியும் நீதி வழங்கப்படாத பாதிக்கப்பட்ட – உயிர்பிழைத்த தமிழ்ச் சமுதாயமானது, சர்வதேச சமுதாயத்தைத் திருப்திப்படுத்தும் நோக்குடன் எத்தனிக்கப்படும் இத்திட்டத்தின்மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தி அதனை விமர்சித்து வருகிறது. கடந்தகால உள்ளகப்பொறிமுறைகளின் பயனற்றதன்மை இலங்கை அரசாங்கத்தின் இரட்டைவேட ஏமாற்றும் தன்மைக்குச் சாட்சியம் கூறுகின்றது. பாதிக்கப்பட்ட – உயிர்பிழைத்த தமிழ்ச்சமுதாயத்தை உண்மைத்தன்மை வாய்ந்த பொறுப்புக் கூறற் செயல்முறை ஒன்றின்றி இன்னுமோர் உண்மை ஆணைக்குழுவிற் பங்கெடுக்க வேண்டுமெனப் பணித்தலானது அவர்களை மீண்டும் மனஉளைச்சலுக்குள்ளாக்கும் ஒரு செயற்பாடே அன்றி அர்த்தமுள்ள வகையில் கடந்தகாலத்தைக் கையாளும் ஒரு வழி ஆகாது.
போர்முடிந்து பதினான்கு வருடங்களுக்குப்பின்னும் யுத்தம் ஆரம்பித்ததற்க்கான அடிப்படைக்காரணிகள் தொடர்ந்தும் நீடித்து வருவது, தமிழரின் தாயகமான வடக்கு – கிழக்கின் வரலாற்றைத் திரிபுபடுத்தி அதில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் நோக்கோடு செயற்படும் தொல்பொருட் திணைக்களம் மற்றும் வனவளத் திணைக்களம் போன்ற அரச உறுப்புக்களின் செயற்பாடுகளினூடக புதிய வழிகளிற் தொடரப்படுகின்ற சிங்கள – பௌத்த பேரினவாதத்திலிருந்து தெளிவாகின்றது.
பாதிக்கப்பட்ட – உயிர்பிழைத்த தமிழ்ச் சமுதாயமானது இலங்கை அரசின் முழுப் பலமும் தனக்கெதிராக இருப்பினும் தமது அளப்பரிய நெகிழ்திறமையை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தமது நீதிக்கான போராட்டத்தை 2000வது நாட்களைத் தாண்டியும் தொடர்ந்துகொண்டு வருவதுடன், தமிழினத்தின் வலிமைவாய்ந்த சக்தியாக வளர்ந்து வருகின்றனர். இடம்பெயர்ந்த தமிழ்ச் சமுதாய மக்கள் குருந்தூர்மலையிலிருந்து கிண்ணியா வரைக்கும் தமது மீள்குடியேற்றத்துக்குத் தடையாக விளங்கும் சிங்கள – பௌத்தமயமாக்கற் செயற்பாடுகளை நீதிமன்றங்களினூடாகவும், வீதிகளில் மக்களாட்சிக்கு முரணாகாத போராட்டங்களினூடாகவும் தொடர்ந்து
எதிர்த்து வருகிறார்கள். இந்நெகிழ்திறமையானது தமிழ்ச் சமூகம் சுமந்துவரும் மனஅதிர்வின் பெருஞ்சுமைக்கு ஈடாவதுடன்; நீதி கிடைக்காத நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் சமூக உளவியற் பளுவைக் குறைத்து மதிப்பிடப்படலாகாது.
தற்போதைய நிலை இருண்டதாகத் தோன்றினாலும் தமிழ்ச் சமுதாயமானது விரக்திக்கு அடிபணியவில்லை. அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையமானது, போரின்போது புரியப்பட்ட அட்டூழியக் குற்றங்களுக்கு நீதி மற்றும் பொறுப்புகூறலைத் தேடும் எமது கடப்பாட்டை முள்ளிவாய்க்கால் நினைவுகளையும், போரில் இறந்தவர்களையும் நிறைவுகூரும் இத்தருணத்தில் மீள உறுதிப்படுத்துகின்றோம்.
You must be logged in to post a comment.