(Jaffna/London: May 17th, 2019) As part of a collaborative project marking the 10th year since the end of the war in Sri Lanka, today the Adayaalam Centre for Policy Research, Tamil Guardian and 47 Roots, launched: www.RememberMay2009.com. The website aims to provide a resource that maps out the atrocities that took place during the final months of the armed conflict and reflects on their impact 10 years later.
“For the Tamil community, the last phase of the war marks one of the darkest periods in the nation’s history, and is recognised as a genocide,” said Research Director of Adayaalam, Dharsha Jegatheeswaran. “We aim with this site to build an archive comprehensively documenting the daily realities during this last phase, and also the Tamil polity’s resistance to these horrific atrocities over the last decade.”
The website features a comprehensive timeline of January to May 2009, an interactive map of the diaspora’s protests in 2009, a diverse range of reflections from the Tamil polity, and a gallery of artwork commemorating Mullivaikkaal.
“We plan to continue adding to and building this website so that it serves as a platform for reflection but also a resource for the continued pursuit of justice for all those who died in Mullivaikkaal,” said Vinorshan Ravindrakumar, Creative Director of 47 Roots.
The website is best view on desktop. We dedicate it to all those lives lost and those who are still searching for justice.
ஊடக வெளியீடு: முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவுகூர்வதற்கான இணையத்தள அறிமுகம்
(யாழ்ப்பாணம்/இலண்டன்: மே 17, 2019) இலங்கையில் யுத்தம் முடிவுற்று பத்து ஆண்டுகள் முடிவடைந்ததைக் குறிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் கூட்டுச் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், தமிழ் கார்டியன் மற்றும் 47 ரூட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து www.RememberMay2009.com எனும் இணையத்தளத்தினை ஆரம்பித்துள்ளனர். இவ்விணையத்தளம் ஆயுத மோதலின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற அட்டூழியங்களை விவரிக்கும் மற்றும் பத்து ஆண்டுகளின் பின் அவை ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து அவதானங்களை மேற்கொள்ளும் வளங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
“தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், யுத்தத்தின் இறுதிக் கட்டமானது இந்நாட்டின் வரலாற்றில் இருண்ட காலப்பகுதிகளில் ஒன்றினைக் குறிப்பதாக அமைவதோடு, ஓர் இனப்படுகொலையாகவும் கருதப்படுகிறது,” என அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் ஆய்வுப் பணிப்பாளர் தர்ஷா ஜெகதீஸ்வரன் தெரிவித்தார். “இவ்விறுதிக் கட்டத்தின் போதான அன்றாட நிதர்சனங்களையும், கடந்த தசாப்தத்தில் இக்கொடூர அட்டூழியங்கள் தொடர்பிற் தமிழரசியலின் எதிர்ப்பையும் விரிவாக ஆவணப்படுத்தும் ஓர் காப்பகத்தை இவ்விணையத்தளத்தினூடு உருவாக்க விளைகிறோம்.”
இவ்விணையத்தளமானது சனவரி 2009 இலிருந்து மே 2009 வரையிலான விரிவான காலவரிசையையும், 2009 இல் புலம்பெயர் சமூகம் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஊடாடு வரைபடம் ஒன்றினையும், தமிழ் அரசியலின் பல்வேறு வகைப்பட்ட அவதானங்கள் மற்றும் பிரதிபலிப்புகளையும், மற்றும் முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் ஒவியக் காட்சியகம் ஒன்றினையும் கொண்டுள்ளது.
“நாம் தொடர்ந்தும் இவ்விணையத்தளத்திற்குத் தரவுகளைச் சேர்ப்பதற்கும், அதை விரிவுபடுத்திக் கட்டியெழுப்புவதற்கும் திட்டமிட்டுள்ளோம். எனவே அது பிரதிபலிப்புகளிற்கான ஒரு தளமாகச் செயற்படுவதோடு, முள்ளிவாய்க்காலில் இறந்த அனைவருக்குமான நீதிக்கான தொடரும் தேடலிற்கான ஒரு வளமாகவும் அமையும்,” என 47 ரூட்ஸ் இன் ஆக்கியற் பணிப்பாளர் வினோர்ஷன் ரவீந்திரக்குமார் தெரிவித்தார்.
நாம் இவ்விணையத்தளத்தினை இழக்கப்பட்ட அனைத்து உயிர்களிற்கும், இன்னும் நீதியைத் தேடிக்கொண்டிருப்பவர்களிற்கும் சமர்ப்பிக்கிறோம்.