ACPR Statement
May 18, 2020
Today we commemorate all those lives that we lost during the war, especially the tens of thousands of Tamil lives that were taken by horrific atrocities perpetrated during the final phase of the war and as a result of the numerous massacres and atrocities committed during the Sri Lankan state’s genocidal campaign against the Tamil people spanning across more than three decades.
Eleven years ago, this week, marked the end of the final stage of the war between the Sri Lankan Government and the LTTE. A stage during which 146,679 Tamil people went unaccounted for, with conservative estimates finding that over 40,000 Tamil civilians were killed. Eleven years on, there is still no justice and accountability for the crimes committed during this final phase despite overwhelming evidence documented by the UN and human rights organizations. Instead of reckoning with its past, Sri Lanka continues to remain trapped in cycles of violence driven by the Sinhala-Buddhist nationalism that characterizes the state’s politics.
The path of ‘victor’s justice’ that the Sri Lankan government has pursued over the last decade with little exception has led to the entrenching of militarisation throughout the state and its institutions. As the rest of the world considered how to protect their populations from the COVID-19 pandemic, Sri Lanka’s President, the man who oversaw the last phase of the war, pardoned a soldier convicted for the massacre of eight Tamil civilians, the only soldier held accountable for this atrocity. Several senior ranking military officials who were named in UN reports as having perpetrated war crimes were promoted to manage the country’s response to the pandemic. The state predictably adopted an authoritarian approach favouring repression of freedom of expression and religion, over human rights.
Yet amidst the lack of truth and justice, the last decade has also been marked by incredible scenes of resistance and perseverance from Tamil victim-survivor communities. Across the North and East, families of the disappeared, displaced communities, and others have protested the injustices of the State and demanded answers. Even as the State cracks down on memorialisation efforts with intensive surveillance and harassment, Tamil communities have continued to hold commemorative events or find ways to collectively mourn in their own homes.
While the path to justice remains fraught with obstacles, it is not impossible, but it also cannot be found through domestic processes. As we remember the thousands of victims of the horrific atrocities of 2009, we re-affirm our commitment to seeking justice for the atrocity crimes committed during those last months and throughout the conflict.
இன்னும் நீதி கிடைக்காத பதினொரு ஆண்டுகள்
வைகாசி 18, 2020
இன்று, நாம் போரில் இழந்த உயிர்களை நினைவுகூர்கிறோம். குறிப்பாக, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் மக்கள் மீது படுகொலைகள் மற்றும் அட்டூழியங்கள் மூலம் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலைப் பிரச்சாரத்தின் விளைவான இறுதிப் போரில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான அட்டூழியங்களால் பறிக்கப்பட்ட உயிர்களை நினைவுகூர்கிறோம்.
பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வாரம், இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்தது. ஒரு கட்டத்தில் 146,679 தமிழ் மக்கள் கணக்கணக்கற்றவர்களானார்கள்; பழமைவாத மதிப்பீடுகளின் படி 40,000 க்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பதினொரு ஆண்டுகளில், ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட ஏராளமான சான்றுகள் இருந்தபோதிலும், இந்த இறுதிக் கட்டத்தில் செய்யப்பட்ட குற்றங்களுக்கு இன்னும் நீதியோ பொறுப்புகூறலோ கிட்டவில்லை. இலங்கை அதன் கடந்த காலத்திற்குப் பொறுப்புக் கூறுவதற்குப் பதிலாக, சிங்கள-பௌத்த தேசியவாதத்தால் இயக்கப்படும் வன்முறைச் சுழற்சிகளில் தொடர்ந்து சிக்கித் தவிக்கிறது.
சிறிய விதிவிலக்குகளுடன் இலங்கை அரசாங்கம் கடந்த தசாப்தத்தில் தொடர்ந்த ‘வெற்றியாளரின் நீதி’க் கோஷம், நாடு மற்றும் அதன் நிறுவனங்கள் முழுவதிலுமான ஆழமான இராணுவமயமாக்கலுக்கு வழிகோலியது. COVID-19 தொற்றுநோயிலிருந்து தங்கள் மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதையே உலகின் பிற தலைவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில் போரின் கடைசி கட்டத்தை மேற்பார்வையிட்டவரான இலங்கையின் ஜனாதிபதி, எட்டு தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அவ்வட்டூழியத்துக்குப் பொறுப்பெனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒரே ஒரு சிப்பாய்க்கும் மன்னிப்பு வழங்கினார். ஐ.நா. அறிக்கைகளில் போர்க்குற்றங்களைச் செய்ததாக பெயரிடப்பட்ட பல மூத்த இராணுவ அதிகாரிகள் இந்நாட்டில் தொற்றுநோய்க்கெதிரான பணிகளை நிர்வகிக்கும் பொருட்டு பதவி உயர்த்தப்பட்டனர். எதிர்பார்த்தபடியே, மனித உரிமைகளை முன்னுரிமைவழங்குவதை விடுத்து, கருத்து மற்றும் மதச் சுதந்திரத்தை அடக்குவதற்குச் சாதகமான ஒரு சர்வாதிகார அணுகுமுறையையே அரசு கையிலெடுத்துள்ளது.
உண்மை மற்றும் நீதி இல்லாத நிலையில், கடந்த தசாப்தமானது பாதிக்கப்பட்ட-தப்பிப்பிழைத்த தமிழ்ச் சமூகங்களின் எதிர்ப்பு மற்றும் விடாமுயற்சியின் நம்பமுடியாத காட்சிகளால் குறிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும், காணாமற் போன, இடம்பெயர்ந்த சமூகங்களின் குடும்பங்கள் மற்றும் பலர் அரசின் அநீதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதில்களைக் கோரியவண்ணமுள்ளனர். தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் தொந்தரவு மூலம் நினைவுகூறும் முயற்சிகளை அரசு தடுத்து வந்தாலும், தமிழ் சமூகங்கள் தொடர்ந்தும் நினைவு நிகழ்வுகளை நடத்தி வருவதுடன் அல்லது தங்கள் சொந்த வீடுகளில் கூட்டாக நினைவுகூர்வதற்கான வழிகளைக் கண்டறிந்துள்ளன.
நீதிக்கான பாதை தடைகள் நிறைந்ததாக இருந்தாலும், அது சாத்தியமற்றது அல்ல; ஆனால் உள்நாட்டுச் செயல்முறைகள் மூலமாகவும் அவற்றைப் பெற முடியாது. 2009 ஆம் ஆண்டின் கொடூரமான அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை நாங்கள் நினைவிற் கொண்டு, அந்த கடைசி மாதங்களிலும் மோதல்களிலும் நடந்த அட்டூழியக் குற்றங்களுக்கு நீதி தேடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
Statement available for down in English here, and in Tamil here.