18 May 2025
On this day that marks 16 years since the end of the armed conflict, we commemorate all the lives that perished during the armed conflict, particularly the thousands of innocent Tamil civilians killed in the Sri Lankan State’s genocidal execution of the final phase of the conflict.
Even after 16 years, the prospect of justice is still not in sight. Since 2009, Sri Lanka has undergone four presidential and parliamentary elections. No government has genuinely committed to tackling impunity for atrocity crimes or establishing sustainable accountability mechanisms.
President Anura Kumara Dissanayake (AKD)’s government, judging by its actions so far, appears to be treading on the same evasive path. Embracing ‘reconciliation’ rhetoric, AKD’s government tries to win over the Tamil polity in the North-East without a genuine commitment to justice for past violations. At the 57th and 58th sessions of the UN Human Rights Council, Sri Lanka’s delegates decried the ‘Sri Lanka Accountability Project’ as an intrusive measure and claimed Sri Lanka would pursue domestic mechanisms instead – the same rhetoric that the previous governments used to sideline post-war justice.
The new government’s actions have not raised faith or confidence amongst the Tamils. Militarisation, as well as the intimidation and surveillance of activists in the North-East, persists. The State is persistent in its use of repressive laws such as the Prevention of Terrorism Act, which the government promised to abolish, to crack down on dissent. The civic space in the North-East remains unsafe. The new government has so far failed to release expropriated land and failed to address the ethno-religious tensions that such expropriation engendered. All these actions render the government’s claims of ‘reconciliation’ an empty gesture, which the recent announcement to expropriate large swathes of land in coastal areas from Pudumatalan to Mullivaikkal in the North only serves to reinforce.
The Tamil victim-survivors, with lingering pain, look towards the international community for justice, having completely lost trust in domestic accountability, but to no avail yet. Despite the setbacks and continued frustrations, the Tamil polity is still firm in its demand for justice and accountability. We at the Adayaalam Centre for Policy Research pay our respect to the lives lost in Mullivaikkaal and reaffirm our commitment to seeking justice and accountability and striving towards it.
18 மே 2025
பதினாறு ஆண்டுகளின் பின்னும் தொடரும் நீதியற்ற நிலை
ஆயத மோதல் முடிந்து பதினாறு ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் இந்நாளில், போரின்போது உயிரிழந்த அனைத்து உயிர்களையும், அதிலும் குறிப்பாக யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இலங்கை அரசினால் இழைக்கப்பட்ட இனவழிப்பில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களையும் நாம் நினைவு கூருகிறோம்.
பதினாறு ஆண்டுகள் கடந்தும், நீதிக்கான சாத்தியக் கூறுகள் கண் எட்டும் தொலைவில் இல்லை. 2009இன் பின்னர், இலங்கை நான்கு சனாதிபதித் தேர்தல்களையும், பாராளுமன்றத் தேர்தல்களையும் சந்தித்துள்ளது. இருப்பினும், அட்டூழியக் குற்றங்களுக்கான நீதியில்லா நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கோ அல்லது நிலையான பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை நிறுவுவதற்கோ இவ்வரசாங்கங்கள் எவையும் உண்மையில் உறுதிபூணவில்லை.
இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, சனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கமும் தனக்கு முன்னிருந்த அரசாங்கங்கள் சென்ற அதே ஏமாற்றும் பாதையில் பயணிப்பதாகவே தெரிகிறது. ‘நல்லிணக்கம்’ எனும் கருத்தாடலைத் தழுவி, அநுரகுமாரவின் அரசாங்கம் கடந்த கால அட்டூழியக் குற்றங்களுக்கு நீதி வழங்குவதில் உண்மையான அர்ப்பணிப்பு ஏதும் இல்லாது வடக்கு-கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை வெல்ல முயற்சிக்கிறது. ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் 57வது மற்றும் 58வது அமர்வுகளில், இலங்கையின் பிரதிநிதிகள் ‘இலங்கையில் பொறுப்புக்கூறற் திட்டத்தை’ (SLAP) ஓர் தலையிடல் நடவடிக்கை என்று சாடி, அதற்கு பதிலாக உள்நாட்டு வழிமுறைகளை இலங்கை தொடரும் என்று கூறினர். இது கடந்தகால அரசாங்கங்கள் போருக்குப் பிந்தைய நீதியை ஒதுக்கி வைக்கப் பயன்படுத்திய அதே கருத்தாடலேயாகும்.
இப்புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. வடக்கு-கிழக்கில் இராணுவமயமாக்கமும், அங்குள்ள செயற்பாட்டாளர்களை கண்காணிப்பதும், அவர்களை அச்சுறுத்துவதும் தொடர்கின்றன. மாற்றுக் கருத்துக்களை அடக்கும் பொருட்டு, அரசாங்கமானது தான் நீக்கம் செய்வதாக உறுதியளித்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களைத் தொடர்ந்தும் பயன்படுதி வருகின்றது. வடக்கு-கிழக்கில் குடிமை இடம் இன்னும் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளது. புதிய அரசாங்கமானது கைக்கொள்ளப்பட்ட நிலத்தை விடுவிப்பதற்கோ அல்லது அத்தகைய கைக்கொள்ளலால் உருவாகியுள்ள இன-மத முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கோ இதுவரை தவறிவிட்டது. இவை அனைத்தும் அரசாங்கம் கூறும் ‘நல்லிணக்கம்’ என்பது பெயரளவிலானது மட்டுமே என்பதையே தெரிவிக்கின்றன. வடக்கில் புதுமாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான கரையோரப் பகுதிகளில் உள்ள பாரிய அளவிலான காணிகளைக் கைக்கொள்ளுவது தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு இதனை மேலும் வலுப்படுத்துகிறது.
பாதிக்கப்பட்ட-தப்பிப்பிழைத்த தமிழ் மக்கள், உள்நாட்டுப் பொறுப்புக்கூறலில் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்ட நிலையில், நீதியைப் பெற்றுத்தருவார்கள் என நீடித்த வலியுடன் சர்வதேசச் சமூகத்தை நோக்குகின்ற போதிலும், இதுவரை அவர்களால் எந்தப் பயனும் கிட்டவில்லை. பின்னடைவுகளுக்கும், தொடர்ச்சியான ஏமாற்றங்களுக்கும் மத்தியிலும், தமிழ் அரசியற் சமூகமானது நீதிக்கானதும், பொறுப்புக்கூறலுக்கானதுமான கோரிக்கையில் இன்னும் உறுதியாக உள்ளது. அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தைச் சார்ந்த நாம், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூருவதுடன், இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான நீதியையும், பொறுப்புக் கூறலையும் நாடுவதன் பால் எமக்கிருக்கும் பொறுப்பையும், அதன்பாற் செயற்படுவதற்கு எமக்குள்ள கடமையையும் மீளவுறுதி செய்கிறோம்.