18 May 2024
This May 18th, marking 15 years since the end of the armed conflict, we commemorate all the lives lost during the war, particularly the tens of thousands of Tamils killed in the genocide during the final stages.
15 years on from the end of the war, impunity persists, and future prospects of justice look dim. The perpetrators who committed mass atrocity crimes still walk free, being extolled as ‘war heroes’. Protected by successive governments, not a single perpetrator has been brought to justice. Protests demanding justice, particularly for the forcibly disappeared, have gone unheeded for years.
Instead of meaningfully addressing the genocide and other atrocities, the Sri Lankan government continues to beat the false drum of ‘reconciliation’. The hastily proposed Commission on Truth, Unity and Reconciliation, is just the latest in a long line of initiatives designed to placate the international community while suppressing any momentum for actual accountability. The duplicity behind so-called reconciliation efforts is evident in the government’s unwillingness to execute basic confidence-building measures such as the release of land, demilitarisation of the North-East and enactment of legislation criminalising atrocity crimes. Yet, disappointingly, the international community appears unwilling or unable to see through the government’s façade with ambassadors appearing alongside war criminals and training being provided to a military established to have committed atrocity crimes.
Tamil victim-survivor communities, meanwhile, continue to face repression and ongoing attempts to erase their homes, communities and culture. From weaponising the ICCPR Act to crack down on civil society and protestors, to continuing Sinhala-Buddhisisation of historically Tamil areas under the guise of ‘archaeological preservation’, the intentions of the government are clearly not those of reconciliation.
It is striking that even in remembrance, Tamils are forced to contend with state repression, intimidation and harassment.
Without meaningful accountability and a political solution that addresses the grievances of numerically smaller communities, conflict and instability will continue to plague the island.
15 years on, the Tamil polity stands strong in the face of the seemingly insurmountable obstacles to achieving justice and peace and remains firm in its resolve. In commemorating all those lost in Mullivaikkaal, we at the Adayaalam Centre for Policy Research reaffirm our commitment to seeking justice and accountability for them.
பதினைந்து வருட நீதியின்மை, அடக்குமுறை மற்றும் நீதிக்கான போராட்டம்
ஆயுதப் போர் முடிவடைந்து பதினைந்து வருடமாகுவதைக் குறிக்கும் இவ்வருடத்தின் மே மாதம் 18ம் திகதியிலே, நாங்கள் யுத்தத்தில் மடிந்த அனைத்து உயிர்களையும், அதிலும் குறிப்பாக யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இழைக்கப்பட்ட இனவழிப்பில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாம் நினைவு கூருகின்றோம்.
யுத்தம் முடிந்து பதினைந்து வருடங்களாகியும் நீதியில்லா நிலை தொடர்கின்றதுடன், எதிர்காலத்தில் நீதிக்கான வாய்ப்புக்களும் மங்கலாகவே உள்ளன. பாரிய அட்டூழியக் குற்றங்களைப் புரிந்தோர் ‘போர் வீரர்கள்’ எனப் புகழப்பட்டு சுதந்திரமாக நடமாடுகின்றனர். தொடர்ந்து வந்த அரசாங்கங்களினால் பாதுக்காக்கப்பட்டுவரும் இவர்களில் ஒருவரேனும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை. நீதியைக் கோரும் போராட்டங்கள், குறிப்பாக வலிந்து காணமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டங்கள், பலவருடங்களாக செவிமடுக்கப்படவில்லை.
இலங்கை அரசாங்கம் இனப்படுகொலையையும், ஏனைய அட்டூழியக் குற்றங்களையும் அர்த்தமுள்ள வகையில் கையாள்வதற்குப் பதிலாக, ‘நல்லிணக்கம்’ எனும் கபட நாடகத்தை தொடர்ந்து நடாத்தி வருகிறது. அதிவேகமாகக் கொண்டுவரப்படுள்ள உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவானது, சர்வதேச சமூகத்தைத் திருப்திப் படுத்தும் அதேவேளை பொறுப்புக் கூறலுக்கான அர்த்தமுள்ள இயங்குவிசைகளை நசுக்கும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட நீண்ட வரிசையிலான முன்னெடுப்புகளில் சமீபத்தைய ஒன்றாகும். இவ்வாறான நல்லிணக்கச் செயற்பாடுகள் எனக் கூறப்படுபவற்றின் கபடத் தன்மையை கைக்கொள்ளப்பட்டுள்ள நிலத்தை விடுவித்தல், வடக்கு-கிழக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை வெளியேற்றல், மற்றும் அட்டூழியக் குற்றங்களை சட்டவாக்கத்தின் மூலம் இலங்கையின் சட்டத்துள் குற்றங்களாகப் பிரகடனப்படுத்தல் போன்ற நம்பிக்கையைக் கட்டியெழுப்புவற்கான அடிப்படையான நடவடிக்கைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள விருப்பின்மை தெளிவு படுத்துகிறது. நிலைமை இவ்வாறிருக்க, சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தின் கபடவேடத்தை இனங்காணமல் இருப்பது அல்லது இனங்கான மறுப்பது, வெளிநாட்டுத் தூதுவர்கள் போர்க்குற்றம் புரிந்தவர்களுடன் கைகோர்த்து நிற்பது அத்துடன் அட்டூழியக் குற்றங்களைப் புரிந்த இராணுவத்திற்குப் பயிற்சி வழங்குவது போன்றன ஏமாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில், தப்பி உயிர்பிழைத்த தமிழ்ச் சமுதாயங்கள் ஒடுக்குமுறைகளையும், அவர்களின் இருப்பிடங்கள், சமுதாயங்கள் மற்றும் கலாச்சாரத்தை அழிப்பதற்கான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேச சமவாய சட்டத்தை ஒடுக்குமுறைக்கான ஆயுதமாக்கல், சிவில் சமுகம் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை, மற்றும் ‘தொல்பொருட் சின்னங்களைப் பாதுகாத்தல்’ என்ற போர்வையில் தமிழர் தாயகத்தைச் சிங்கள-பௌத்த மயமாக்கல் என்பவற்றிலிருந்து அரசாங்கத்தின் நோக்கம் நல்லிணக்கம் இல்லை என்பது தெளிவாகின்றது.
அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் மற்றும் சனத்தொகையில் சிறுபான்மையாகவுள்ள சமூகங்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அரசியல் தீர்வு இல்லாதவரை இத்தீவில் முரண்பாடுகளும், உறுதியின்மையும் கோலோச்சிக்கொண்டேதான் இருக்கும்.
பதினைந்து வருடங்கள் கடந்த பின்பும் நீதி மற்றும் சமாதானத்தை அடைவதற்கு இடையூறாக வெல்லமுடியாதவை போன்றிருக்கும் சக்திகளை எதிர்த்து, நீதி மற்றும் சமாதானத்தை அடைவதற்கான தனது தீர்மானத்தில் தமிழ் இனம் உறுதியாக நிற்கின்றது. அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தைச் சார்ந்த நாம் முள்ளிவாய்க்காலில் மடிந்தவர்களை நினைவுகூருவதனூடாக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி மற்றும் பொறுப்புக் கூறலைப் பெற்றுத்தருவதற்கான எமது கடமையை மீள் உறுதி செய்கின்றோம்.
Please see here for a separate joint civil society statement on the repression of memorialisation by the government this year.